புதன், 9 ஜூலை, 2014                                                                                                                   பாசமுள்ள கனவே -                                                                                                                    நீ நலமாய் இருக்க

                                                                                                                    இறைவன்                                                                                                                                          துணைபுரிவாராக ...                                                                                                                     மேலும்

                                                                                                                      நீ வந்து போனது...
                                                                                                                       தந்து போனது...

நிறையவே ஞாபகம் இருக்கிறது.

நேற்று வருவாய் என்றுதான் காத்திருந்தேன்.

ஏன் வரவில்லை -

என் மேல் கோபமா....

நான் அழுது விட்டேன் தெரியுமா...?

தூக்கமும் வருகிறது -

இனியும் என்னால் எழுத முடியவில்லை....

இத்துடன் மடலை முடிக்கிறேன்.

உன் பதில் கண்டு தொடருகிறேன்

இங்கனம் உண்மையுள்ள

விழிகள்....


நெடுந்தீவு முகிலன்
காலையில் தான் தங்கச்சிக்கு கலியாணம் கேட்டு வந்தது.
மாப்பிள்ளை வெளிநாடாம் - சீதனம் கேட்க்கவில்லை
“நகை நட்டு போட்டால் போதுமாம்”
எப்படியாவது கட்டி கொடுத்திடலாம் -என்ற புழுகில்
அப்பனும் ஆத்தாளும்...

ஓன்னுமே தெரியாத தங்கச்சி விறாந்தையில் இருந்து
புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறாள்.
“சாதனைப் பெண்கள் பற்றி”

நெடுந்தீவு முகிலன்
வாரத்துக்கு ஒரு முறை
"பிட்சா கட்" சேர்ந்து வருகிறேன்.
சொல்லும் "ஓடர்" வர ஒரு மணி நேரமாவதால்..
நீ பேசும் எல்லாத்தையும் சகிக்கின்றேன்

காதலித்ததில் இருந்து நான்
ஒரு வெள்ளியையும் தவறவிட்டதில்லை....
உன் விரல்கள் வீபூதியிடவதாய் முத்தமுமிடுகிறது.

காலையும் மாலையும் "வோக்கிங்" போகிறேன்
தொந்தியை குறைக்கவும் கூடவே உன் தொலைபேசி
அழைப்பில் இருந்து தப்பித்துகொள்ளவும்...

பெண்களின் புகைப்படங்களை போட்டு
என் முகநூலில் வசிக்கும் ஆண்களையே...
அழிக்க சொல்கிறாய் - ஆனால்
ஆண்களின் பெயரில் கணக்கு வைத்திருக்கும்
பெண்களை உனக்கு தெரியாது...

எவளாவது என்னை திரும்பி பார்த்தால் - உடனே
அவளை பார்த்து முறைக்கிறாய்.
உன்னை எவனாவது சும்மா பார்த்தால் போதும்
"சைற்" அடிக்கிறான் என்று திமிராய் சொல்கிறாய்.

குழந்தைகளை எங்கு பார்தாலும்
தூரத்தில் நின்றே கையை வாயில் ஒட்டி
முத்தம் கொடுக்கிறாய்.
நான் கேட்டால் அதே கையால்..
என் வாயை மூடுகிறாய்.

தெரியாத இடத்தில் புதிய மனிதர்களுக்கு மத்தியில்
என்னை நெருக்கி பிடித்து இழுத்து நடக்கிறாய்.
பழகிய எல்லாம் தெரிந்த இடத்தில்
என்னை யார் என்றே தெரியாமல் விலகுகிறாய்.
நெடுந்தீவு முகிலன்