பாசமுள்ள கனவே - நீ நலமாய் இருக்க
இறைவன் துணைபுரிவாராக ... மேலும்
நீ வந்து போனது...
தந்து போனது...
நிறையவே ஞாபகம் இருக்கிறது.
நேற்று வருவாய் என்றுதான் காத்திருந்தேன்.
ஏன் வரவில்லை -
என் மேல் கோபமா....
நான் அழுது விட்டேன் தெரியுமா...?
தூக்கமும் வருகிறது -
இனியும் என்னால் எழுத முடியவில்லை....
இத்துடன் மடலை முடிக்கிறேன்.
உன் பதில் கண்டு தொடருகிறேன்
இங்கனம் உண்மையுள்ள
விழிகள்....
நெடுந்தீவு முகிலன்
காதல் பிரிவு கவிதை அழகு சகோ!
பதிலளிநீக்கு