வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011


கடவுள்களை செதுக்கும்
கற்களில்...உலோகங்களில்
உன்னை செதுக்கவும் பிடிக்கவில்லை.
நீ மென்மையானவள்...

நெடுந்தீவு-முகிலன்

ஐஸ் கிறீம் சாப்பிட்டுவிட்டு
இருவரும் சென்று விட்டோம் - ஆனால்
கப்புகள் இரண்டுமோ ஜோடியாய் கிடந்தன.

நெடுந்தீவு முகிலன்

பூக்கடையில் உன்னை பார்த்துவிட்டு திரும்பினேன் - நீ
பழக்கடையிலும் இருந்தாய்.

நெடுந்தீவு முகிலன்

ஒரு முறை நீ என் தோள்களில் சாய்ந்தாய்
எவ்வளவு இதமாக இருந்தது .
எப்படி இருக்குமோ..நீ
நிரந்தரமாகவே தூங்கி எழும் மரக்கட்டிலுக்கு

நெடுந்தீவு முகிலன்

என் தோள்களில் சாய்ந்து செல்கிறாய்...
சலவை செய்யப்படாமல் சட்டைகள்தான் நிறைகிறது.

நெடுந்தீவு முகிலன்

நீயும் நானும் ஒரே தட்டில் சாப்பிட்டோம் -அப்போது
எப்படி என்னையும் சேர்த்து சாப்பிட்டது.
உன் உதடுகள்

நெடுந்தீவு முகிலன்

ஒருவரைப்போல உலகில்
ஏழு பேர் இருப்பார்களாம்.
அழகிலோ நீ ஏழு பேர் மாதிரி

நெடுந்தீவு முகிலன்

நீ கல்லூரி சென்றுகொண்டிருந்த பொழுது ...... கவிதையை
எழுத முடியவில்லை...
வரையத்தான் முடிந்தது

நெடுந்தீவு முகிலன்

கடற்கரை ஓரத்தில் நீயும் நானும்..
கை கோர்த்து நின்ற போது - இரண்டு
மீன்கள் இறந்து கிடந்தன.
ஒரு வேளை ஜாதி பிரச்சனையால்
அவைகள் தற்கொலை செய்து கொண்டனவோ..

நெடுந்தீவு முகிலன்

நிலத்தில் கதிரை இருக்கிறது.
கதிரையில் நான் இருக்கிறேன்.
என்னில் நீ இருக்கிறாய் - ஆனாலும்
உட்க்காராமல் இருக்கிறது
உனது வெட்கங்கள்

நெடுந்தீவு முகிலன்

கடவுளே... இன்னும் ஓர் தேவதையை மண்ணுக்கு அனுப்பி விடாதே
என்னால் ஒரு முறைதான் சாக முடியும்.

நெடுந்தீவு முகிலன்

உயிரோடு புதைக்கப்பட்டுவிட்டேன் - உன்
கன்னக்குழியில்

நெடுந்தீவு முகிலன்

உறங்கும் வரைதான் நான் அனாதை
அப்புறம் தானே - நீ
கனவில் வந்து விடுவாய்

நெடுந்தீவு முகிலன்

உன்னை வரைந்து வைத்திருந்தேன்
பட்டாம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன…
உன்னை எழுதி வைத்திருந்தேன்.
எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன….

நெடுந்தீவு முகிலன்

நீ கட்டிய சேலைகளைத் தா
சலவை செய்வதற்கு - என்னிடம்
நிறைய கண்ணீர் இருக்கிறது...

நெடுந்தீவு முகிலன்

கூந்தலால் உனது முகம் முழுவதையும் மூடுதலையையே - நான் அமாவாசை என்கிறேன்

நெடுந்தீவு முகிலன்

முதல் சந்திப்புகளில் - நீ
வள்ளலாய் இருந்தாய்.
நிறைய நிறைய காதலைத்தந்து

நெடுந்தீவு முகிலன்

என் வாழ் நாள் முடிவதற்குள் உன்னை சந்தித்து விடுவேன் என நம்புகிறேன் - இந்த அமாவாசை அடுத்த வாரத்துக்குள் முடிந்து விடும் தனே….

நெடுந்தீவு முகிலன்

உன் வெட்கம் நீளமாகிப்போக போக..
என்காதலின் கனவளவுதான்
அதிகரிக்கின்றது.

நெடுந்தீவு முகிலன்

என் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யாதீர்கள்....
என்னவளின் அடையாளங்கள் எக்கச்சக்கமாய் இருக்கிறது.

நெடுந்தீவு முகிலன்

நான் பட்டாம் பூச்சியை துரத்திக்கொண்டிருக்கையில்
பட்டாம் பூச்சி யோ உன்னைத் துரத்திக்கொண்டிருந்தது.

நெடுந்தீவு முகிலன்

காதலைப் பற்றியே – என்னோடு
பேசாதீர்கள் என் முகமூடியே..
அழுதுவிடும்.

நெடுந்தீவு முகிலன்

ஓவியம் எழுதத்தெரியாது – ஆனாலும்
உன்னை வரைவதற்கு
கலர்பென்சில்கள்…
வாங்கிய ஞாபகம் இருக்கிறது.

நெடுந்தீவு முகிலன்

சமாதிக்கும் - நீ
வரமாட்டாய் என்பதாலே – நான்
இன்னும் சாகவில்லை

நெடுந்தீவு முகிலன்

சொந்தமாக
தொழில் தொடங்கினேன் - அதுவும்
உன்னைக் காதலிப்பதே..

நெடுந்தீவு முகிலன்

தேர்தல் கேட்டுப்பார்.
உதடுகளை விட
புன்னகைக்கே
ஓட்டுக்கள் அதிகமாகும்.

நெடுந்தீவு முகிலன்

சிகரட் புகையை
சுவாசப் பைக்குள்ளே
இருத்தி வைக்கிறேன் - உன்னை
நினைத்து உறிஞ்சியதால்..

நெடுந்தீவு முகிலன்

வானத்தை இரசிப்பதை விட – நான்
மேகத்தை நேசிப்பது தான் அதிகம்
அதுதானே உன்னைப்போல்
கலைந்து போகிறது.

நெடுந்தீவு முகிலன்

நீ இதயத்தை
வெளியே எடுக்கையில்
எலும்புக் கம்பிகளை
எப்படி உடைத்தாய்.

நெடுந்தீவு முகிலன்

நீ அழகிய ஓவியக்காரி
எனக்காய் வரைய முடிந்தது.
கல்லறை மாத்திரமா..?

நெடுந்தீவு முகிலன்

நரம்புகளை தண்டவாளமாக்கி
நினைவுகளை ரயிலாய் ஊரவிடுகிறேன்.
எல்லாப் பெட்டிக்;குள்ளும் - நீதான்
இருக்கிறாய்.

நெடுந்தீவு முகிலன்

நானும்
விஞ்ஞானி ஆனேன் - உன்னில்
காதலைக் கண்டுபிடித்து…

நெடுந்தீவு முகிலன்

நிறைய முகங்கள்
ஞாபகம் இருக்கிறது.
உன் முகம்
நிறைய ஞாபகம் இருக்கிறது.

நெடுந்தீவு முகிலன்

குழந்தையாகவாவது…
இருந்திருக்கலாம் - நீ
துக்கி அணைக்கும்
ஸ்பெசல் பிரியத்துக்காய்.

நெடுந்தீவு முகிலன்

காதலும் - ஒரு
வகையில் பண்டமாற்று
மனசைக்கொடுத்து
நினைவை வாங்குவதால்…

நெடுந்தீவு முகிலன்

யார் நடனம்
கற்றுக்கொடுத்தார்கள் - நீ
இறங்கிப்போன பின்னும்
நான் அரங்கில் நிற்கிறேன்.

நெடுந்தீவு முகிலன்

நீ இரக்கக்காரிதான்.
கேட்க்காமலே..
கொடுக்கிறாயே.. சோகங்களை..

நெடுந்தீவு முகிலன்

நீ என் நவீன
நாளிதழ் - ஆனாலும்
உம்முண்ணு இருப்பதே
என் தலைப்புச்செய்தி.

நெடுந்தீவு முகிலன்

அந்த நாட்களில்
உயிரோடு இருந்ததே – உன்
வார்த்தைகளை வாங்கி
வங்கியில் போடுதற்கு…

நெடுந்தீவு முகிலன்

கண்களும் துப்பாக்கி என…
கண்டறிந்த பின்புதான்
தெரிந்து கொண்டேன் - காதலும்
போராட்டம் என்று…

நெடுந்தீவு முகிலன்

எத்தனை முறைகள்
வில்லை உடைத்து – உடைத்து
களைத்து விட்டேன்
இது வரை இல்லையே
எனக்காக ஒரு சீதை

நெடுந்தீவு – முகிலன்


நீ எனக்காக ஓரு பொய் சொல்லு….
என்னைக் காதலிக்கவில்லை என்று….

நெடுந்தீவு – முகிலன்.

வியாழன், 25 ஆகஸ்ட், 2011


நீர்,காற்று, விலங்கு,வெடித்துச் சிதறி….
வித்துக்கள் இடம் பெயர்ந்து விருட்சங்கள் ஆகின்றன.
நீ…உனது பார்வைகளால் பரவல் அடைந்து நந்தவனமாகிறாய்.

நெடுந்தீவு-முகிலன்

திடிரென மின்சாரம் தடைப்பட அப்பா திட்டினார்
மின்சார சபையை... அம்மா ஓடினா பக்கத்துக் கடைக்கு
மண்ணெண்ணை வாங்க....(அப்பாக்கு பயந்தும்)
நான் யோசித்தேன் இப்போது உன்னை அழைத்து வரலாமென...

நெடுந்தீவு முகிலன்.

உன் காலில் செருப்பாக தேய்ந்து கொண்டிருக்கிறேன் - அதற்காகவா
வாசலிலே கழற்றிவிட்டுப் போகிறாய்.

நெடுந்தீவு முகிலன்

புதிது புதிதாய் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
உன் பழைய ஞாபகங்களையே வைத்துக் கொண்டு...

.நெடுந்தீவு முகிலன்

புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டேன் - நீ
இருமிக்கொள்வதால்.

நெடுந்தீவு முகிலன்

இரவானதும் கூடு செல்லும் பறைவைகளாக இமை மூடியதும்
உன் கனவுகள் பறந்து வருகின்றன.

நெடுந்தீவு முகிலன்

நீ பூப்படைந்த போதே....
எனது கவிதைகளும் வயதுக்கு வந்தன.

நெடுந்தீவு முகிலன்

"தேனிகளுக்கு ஓர் அவசர அழைப்பு"
இதோ.... அவள் கூந்தல் உலர்த்துகிறாள்.
ஈரம் காயும் முன்னர் உறிஞ்சி விடுங்கள்....

நெடுந்தீவு முகிலன்