வியாழன், 25 ஆகஸ்ட், 2011
காதல் வ(லி)(ரி)கள்
01
கண்களும் துப்பாக்கி என…
கண்டறிந்த பின்புதான்
தெரிந்து கொண்டேன் - காதலும்
போராட்டம் என்று…
02
...அந்த நாட்களில்
உயிரோடு இருந்ததே – உன்
வார்த்தைகளை வாங்கி
வங்கியில் போடுதற்கு…
03
நீ என் நவீன
நாளிதழ் - ஆனாலும்
உம்முண்ணு இருப்பதே
என் தலைப்புச்செய்தி.
04
நீ இரக்கக்காரிதான்.
கேட்க்காமலே..
கொடுக்கிறாயே.. சோகங்களை..
05
யார் நடனம்
கற்றுக்கொடுத்தார்கள் - நீ
இறங்கிப்போன பின்னும்
நான் அரங்கில் நிற்கிறேன்.
06
காதலும் - ஒரு
வகையில் பண்டமாற்று
மனசைக்கொடுத்து
நினைவை வாங்குவதால்…
07
குழந்தையாகவாவது…
இருந்திருக்கலாம் - நீ
துக்கி அணைக்கும்
ஸ்பெசல் பிரியத்துக்காய்.
08
நிறைய முகங்கள்
ஞாபகம் இருக்கிறது.
உன் முகம்
நிறைய ஞாபகம் இருக்கிறது.
09
நானும்
விஞ்ஞானி ஆனேன் - உன்னில்
காதலைக் கண்டுபிடித்து…
10
நரம்புகளை தண்டவாளமாக்கி
நினைவுகளை ரயிலாய் ஊரவிடுகிறேன்.
எல்லாப் பெட்டிக்;குள்ளும் - நீதான்
இருக்கிறாய்.
11
நீ அழகிய ஓவியக்காரி
எனக்காய் வரைய முடிந்தது.
கல்லறை மாத்திரமா..?
12
நீ இதயத்தை
வெளியே எடுக்கையில்
எலும்புக் கம்பிகளை
எப்படி உடைத்தாய்.
13
வானத்தை இரசிப்பதை விட – நான்
மேகத்தை நேசிப்பது தான் அதிகம்
அதுதானே உன்னைப்போல்
கலைந்து போகிறது.
14
சிகரட் புகையை
சுவாசப் பைக்குள்ளே
இருத்தி வைக்கிறேன் - உன்னை
நினைத்து உறிஞ்சியதால்..
15
தேர்தல் கேட்டுப்பார்.
உதடுகளை விட
புன்னகைக்கே
ஓட்டுக்கள் அதிகமாகும்.
16
சொந்தமாக
தொழில் தொடங்கினேன் - அதுவும்
உன்னைக் காதலிப்பதே..
17
சமாதிக்கும் - நீ
வரமாட்டாய் என்பதாலே – நான்
இன்னும் சாகவில்லை
18
ஓவியம் எழுதத்தெரியாது – ஆனாலும்
உன்னை வரைவதற்கு
கலர்பென்சில்கள்…
வாங்கிய ஞாபகம் இருக்கிறது.
19
விண்மீன்களை..
எண்ணி எண்ணிக் களைத்துவிட்டேன் - நீ
எங்கே இருக்கிறாய்.
20
காதலைப் பற்றியே – என்னோடு
பேசாதீர்கள் என் முகமூடியே..
அழுதுவிடும்.
21
முதல் சந்திப்புகளில் - நீ
வள்ளலாய் இருந்தாய்.
நிறைய நிறைய காதலைத்தந்து ....
22
என் விழித்தண்டவாளத்தில்
...கனவுப்புகை வண்டி
விடியும் வரை ஊர்கிறது.
ஒரே ஒரு பயணிக்காய்..
23
நான் உறங்காத நாட்களை .... உன்னை
சந்தித்த நாட்க்களில் இருந்து
கழித்துப் பார்.
24
உன் வெட்கம் நீளமாகிப்போக போக..
என்காதலின் கனவளவுதான்
அதிகரிக்கின்றது.
25
எத்தனையோ பேராசிரியர்களை ..
கடந்த போதிலும் - உன்னிடம் தானே
நான் தழிழ் கற்றேன்.
26
அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் - நீ
ஒரே தடைவையில் கொடுத்திருக்கிறாய்.
"புன்னகைத்தபடி முறாய்த்துக்கொண்டு"
27
உறக்கம் தான் எனக்கு பிடித்த
தபால்காரன் - அவன் தானே
உன் கனவுகளை கொண்டுவந்து தருகிறான்.
28
நீ என் வரவை
மறுதலித்து கதவுகளை
மூடிய போதும் - இரக்கக்காரி என்று..
இனங்கண்டேன்.
ஜன்னலை மூட மறந்தாயே....
29
ஒரு
ரோஐh செடி வழர்த்து வருகிறேன்
ஓவ்வொரு நாளும் தண்ணீரும் ஊற்றிவருகிறேன்
இதுவரை ஒரு பூ தந்ததில்லை… ஆனால்
நீ எப்படி
பார்க்கும் போதெல்லாம்
ரோஐவாகவே இருக்கிறாய்…..
30
வளையல் கடைக்காரனை திட்டினேன்.
அழகான உன் கைகளுக்கு
பொருத்தமான வளையல்களை
வீதியில் வெய்யிலில்
போட்டு விற்க்கிறான்.
31
கனவில் நீ
வந்து போனால் - நான்
காலையில் தலையனை
அருகில் தேடுகிறேன.;
தவறிவிழுந்திருக்குமென
உன் கொலுசுகளை….
32
எத்தனையோ பெண்களை..
கடந்து விட்டேன் - உன்னைப்போல்
ஒருத்தியும் என்னை வருத்தியதில்லை…
33
உன் பின்னாலே - இனியும்
என்னாலே வர முடியாது.
என்னை நிராகரிப்பது
நீ மட்டும் அல்ல…
உன் நிழலும் தான்.
34
இப்போது எனக்கு தேவை
நீ அல்ல…
“நியாயம்”
எனது இரண்டாவது தொகுதி
“அகேனம்”; இல் இருந்து சில காதல் வ(லி)(ரி)கள்
நெடுந்தீவு முகிலன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தோழரே கவிதைகள் தரமாய் இருக்கிறது .....google follow box,facebook like boxஆகியவற்றை blogspot இல் இணைத்தால் உங்கள் கவிதைகள் பலரிடம் பொய்(கவிதை என்றால் பொய் தானே -போய்) சேரும் சற்று கவனம் செலுத்துங்கள்
பதிலளிநீக்கு