புதன், 25 ஜனவரி, 2012
செவ்வாய், 24 ஜனவரி, 2012
கொழும்பு யாழ் அனுபவம்
தண்ணீர் போத்தல் விற்றவன்
மீதிப்பணம் திருப்பிக் கொடுக்கவில்லை
வில்லங்கத்திற்கு கச்சான் நீட்டியவன்
முதலில் காசைத்தான் கேட்டான் -ஆனால்
உண்பதற்கு உடைக்கையில்
அதிகம் பூஞ்சனமும் பிடித்திருந்தது
ஒருவன் 10 ரூபாவுக்கு
சோளப்பொத்தி விற்றான்
மலிவாய் இருக்கிறது என்று ...............
பலர் வாங்கினார்கள் -அது
பழுதாய் இருந்ததோ தெரியவில்லை
பாதியில் சிலர்
வெளியே வீசினார்கள்
சீப்பு -சோப்பு -கண்ணாடி
பூசிப்போளை விற்றவன்
இனிப்புபண்டங்களும்
வைத்திருந்தான் -அவனது
வியாபாரத் தந்திரம்
குழந்தைகளையும் குறிவைத்தது
நடைபாதை வியாபாரிகளை
அரசு தடை செய்திருக்கிறது
பயண வியாபாரிகளை ......?..?..?
பிரதான சாலையில்
ஒரு உணவகத்தின் அருகில்
பஸ் நிறுத்தப்பட்டபோது
பயணிகளுக்கு ஒரு
கோரிக்கையும் விடப்பட்டது
இடையில் இனி பஸ்
நிறுத்தப்படமாட்டது
வாங்குபவற்றை
எல்லாம் வாங்கி கொள்ளுங்கள்
இறங்கியவர்கள்
ரீ குடித்தார்கள்
பனிஸ் சாப்பிட்டார்கள்
புகைப்பிடித்தார்கள்
மொத்தமாக எல்லோருமே
குறைந்தது
ஒன்றை வாங்கினார்கள்
ஆனால்
ஒவ்வொன்றினதும்
விலையோ இருமடங்காகவே
இருந்தது
நான் யோசித்தேன்
அந்த கடைக்காரர்களும் ....
பஸ்காரர்களும் ......
உறவுக்காரர்களோ என ....
நெடுந்தீவு முகிலன்
முடிந்தால் இது எந்த நகரம் என்று யாராவது சரியாக சொல்லுங்கள் பார்ப்போம்
பெயர்பலகைகளில் புடவைக்கடைகள் என்றுதான்
பொறிக்கப்பட்டிருக்கின்றன - ஆனால்
தொங்கவிடப்பட்டிருப்பதெல்லாம் நிறம்நிறமான நீச்சல் உடைகளே...
பத்து பிள்ளைகளை பெற்றவர்களும் வாய் கூசாமல்
கை நீட்டுகிறார்கள் ... ஒரு ரூபாவுக்காய்.
பஸ்கள் நிரம்பி வழிந்து சரிந்து செல்கிறது
உள்ளே ஏற்றப்பட்டிருப்பது......
பிரயாணிகளா...?.. அல்லது பிராணிகளா..?
21 வயதுக்கு உட்ப்படடவர்களுக்கு புகைத்தல் பொருட்கள்
விற்க்கவே தடை - ஒரு சில தேநீர் கடைகளின் பின்பக்கம் போய்ப்பாருங்கள்
வட்டம் வட்டமாய் புகைவிட்டுக்காட்டுகிறார்கள்...
விடுமுறை நாட்களில் பேருந்து நிலையத்தை சுற்றி
புத்தகங்கள் கொப்பிகளோடு
பெரும் கூட்டமே உலா வருகிறது - அது
மாணவர்கள்தானா.... ? அல்லது வாத்தியார்களுமா..?
சாலையில் ஒருவன் நடமாடும் வரையும் திறந்து வைக்கப்பட்டிருப்பது
மதுபானக்கடைகள்தான் - மன்னிக்கவும்
இறால் வடைக்கடைகளுமே...
கண் அடிப்பதும் கை பிடிப்பதும் குடைக்குள் மறைவதும்
சாதரணமான விடையமாகிவிட்டடது..
பாடசாலைகளுக்கு பக்கத்திலே விடுதிகளும்
புதிதுபுதிதாய் முளைத்துவருகின்றன - இடையிடையே
இராத்திரிப் பெண்களும் கைது செய்யப்படுகின்றனர். (நரகங்கள் தொடரும்)
நெடுந்தீவு முகிலன்
ஆனையிறவு - வவுனியா ஊடான வீதி - 01.02.2011
பஸ்சில் போனாலும் - எனக்கு
கப்பலில் போவது போலவே இருந்தது.
அலைகள் இருக்கவில்லை - ஆனால்
ஆட்டம் இருந்தது.
குன்றும் குழியுமான அந்த வீதிகளில்
மழை நீர் தேங்கி... ஓரத்து வாய்க்காலோடு
ஒன்று சேர்ந்து குளக்கரையை...
நோக்கி சலசலக்கிறது.
லொறிகள் ஒன்றிரண்டு
ஆங்காங்கே புரண்டு
கவிண்டு கிடந்தன.
இருபக்கமும் நாட்டப்பட்டிருந்த
விளம்பரப்பலகைகளிலும்... சேறு படிந்து
புது வர்ணம் பூசப்பட்டிருந்தது.
இடையிடையே "நன்றி மீண்டும் வருக "
என்பது மட்டும் மகுட வாக்கியமாக...
பொறிக்கப்பட்டிருந்தது.
குலுக்கிற குலுக்கலில்
குடல் வெளியே வந்து..
விடும் போல் இருந்தது.
சாளரம் ஊடாக சிலர்
கழுத்தை நீட்டி வாந்தி எடுத்தார்கள்.
பலர் இருக்க முடியாமல்
துள்ளித்துள்ளி எழுந்து நின்றார்கள்.
ஒன்று மட்டும் பரவாயில்லை... வீதிகள்
குன்றும் குழியுமாக இருப்பதால்
ஓட்டுனருக்கு தூக்கம் வர வாய்ப்பில்லை....
- நெடுந்தீவு - முகிலன்
ஒரே நாளில் நான் பார்த்த - இரு மழை அனுபவம் ...
01
அடை மழை பெய்கிறது.
கூரைகள் வழியாக ஒழுகும் மழை நீருக்கு குழந்தைகள்
பாத்திரம் வைக்கிறார்கள் .
மின்சாரம் தடைப்படுகிறது .
விறகுகள் நனைந்து விட மதிய உணவும் கனவாகி விடுகிறது.
நாய் பூனை கோழிகள் எல்லாம் நனைந்து நனைந்து
நடு வீட்டிற்குள் வருகின்றன.
கிணறு நிரம்பி பக்கத்து வாய்க்காலோடு கலக்கிறது.
சாக்கடை நீர் மணக்கிறது.
பாடசாலை கொப்பி புத்தகங்கள் பாதுகாப்பிற்காக...
அடுப்படி பறணில் வைக்கப்படுகிறது.
கோதுமை மா பையை தலையில் போட்டுக் கொண்டு... காயவிடப்பட்ட துணிகள் எடுக்கப்படுகின்றன.
மரங்கள் முறிவதும்.... தவளைகள் கத்துவதும்....
கேட்டுகேட்டு அலுத்து விடுகிறது.
இரவுப் படுக்கைக்கு பக்கத்து கோயிலுக்கு போவதாக...
எல்லோரும் முடிவு எடுக்கிறார்கள்.
02
அடைமழை பெய்கிறது
குளிரென்று கொஞ்சம் ஏசியை குறைத்துக் கொள்கிறார்கள்.
மின்சார அடுப்பில் அவசர அவசரமாக....
சூடான கோப்பி தயாரிக்கப்படுகிறது.
குழந்தைகள் காகிதக் கப்பல்களை..
சரி செய்கிறார்கள்.
யன்னல்கள் சாத்தப்பட்டு தூவானத்திற்கு...
எதிராய் திரைச் சீலையும் மாட்டப்படுகிறது.
வாகனங்கள் உள்ளுக்கு எடுத்து விடப்படுகின்றன.
வானிலை அறிக்கைகள்...
ரீ.வியில் பார்க்கப்படுகிறது
இனிய மழை நாளைப்பற்றி...
உறவுக் காரர்களோடு "ஸ்கைப்பில்" பேசப்படுகிறது
சாதுவாய்த் தூக்கம் வந்ததும் கம்பளியைப் போட்டுக்கொண்டு கதவுகளை அடித்துச் சாத்திக் கொள்கிறார்கள்
வெளியேமுத்ததங்களினது சத்தம் மழையின் இரைச்சலைத் தாண்டியும் கேட்டுக் கொண்டிருந்தது
நெடுந்தீவு முகிலன்
வெள்ளி, 20 ஜனவரி, 2012
வியாழன், 19 ஜனவரி, 2012
தெருவுக்குப் போனால் திருவிழா போல
எனக்குப் பின்னால் பெரும் கூட்டமே வரும்.
அழகாய் இருக்கிறாய்… அம்சமாய் இருக்கிறாய் -என்று
கதை சொல்லுபவர்களுக்கும் குறைவில்லை…
சேலையில் போனால் - மறைந்திருந்து
எனது இடுப்பை விழிகளால்…
திண்றுகொண்டுமிருப்பார்கள்.
கால்க்கொலுசும்… நெக்கிளசும்… போட்டால்
எனக்கு தூக்கலாக இருக்கும் என்று சொன்னவர்களை… மாலையில்
மனைவிமாரோடு அவதானிக்கையில்
உள்ளுக்குள் சிரித்துமிருக்கிறேன்
கூந்தலை கொண்டை முடிக்க சொன்னவர்களையும்…முடித்த
கொண்டையில் பூக்கள் வைக்க முயற்சி செய்தவர்களையும்
நான் மறந்து விடவில்லை…
காலையில் வரும் பால்க்காரனே…. விசாரிப்பான்
இராத்திரி வேலை எப்படி என்று….
இரவில் என்னோடு ஒட்டி இருந்தவர்களும் - காலையில்
என்னைப்பற்றி ஊருக்குள் பிதற்றிக்கொள்வார்கள்.
வந்தவர்கள் நீங்கள் எல்லோரும்
எனது உள்ளாடை வரை களைந்து
சதைகளை விரல்களாலும் உண்டவர்கள் - ஆனால்
நகங்கள் தந்த காயத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
ஆண்மையில் வெளிவந்த பசலையை…
எனது இடையிலும்… எனது படுக்கை விரிப்பிலும் … தெழித்து விட்டு
முகம் சுழித்துப் போவீர்கள்.
வலியும் குருதியும் கசியும் எனது யோனியை…
அடுத்த இராத்திரிக்குள்
அவசரமாய் சுத்தப்படுத்தியாக வேண்டும்.
வரிசையில் எனது வாடிக்கையாளர்கள்
பணத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
குடிசையில் எனது குழந்தைகள்
பசியோடு அழுதுகொண்டிருக்கிறார்கள்.
நெடுந்தீவு முகிலன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)