செவ்வாய், 24 ஜனவரி, 2012
கொழும்பு யாழ் அனுபவம்
தண்ணீர் போத்தல் விற்றவன்
மீதிப்பணம் திருப்பிக் கொடுக்கவில்லை
வில்லங்கத்திற்கு கச்சான் நீட்டியவன்
முதலில் காசைத்தான் கேட்டான் -ஆனால்
உண்பதற்கு உடைக்கையில்
அதிகம் பூஞ்சனமும் பிடித்திருந்தது
ஒருவன் 10 ரூபாவுக்கு
சோளப்பொத்தி விற்றான்
மலிவாய் இருக்கிறது என்று ...............
பலர் வாங்கினார்கள் -அது
பழுதாய் இருந்ததோ தெரியவில்லை
பாதியில் சிலர்
வெளியே வீசினார்கள்
சீப்பு -சோப்பு -கண்ணாடி
பூசிப்போளை விற்றவன்
இனிப்புபண்டங்களும்
வைத்திருந்தான் -அவனது
வியாபாரத் தந்திரம்
குழந்தைகளையும் குறிவைத்தது
நடைபாதை வியாபாரிகளை
அரசு தடை செய்திருக்கிறது
பயண வியாபாரிகளை ......?..?..?
பிரதான சாலையில்
ஒரு உணவகத்தின் அருகில்
பஸ் நிறுத்தப்பட்டபோது
பயணிகளுக்கு ஒரு
கோரிக்கையும் விடப்பட்டது
இடையில் இனி பஸ்
நிறுத்தப்படமாட்டது
வாங்குபவற்றை
எல்லாம் வாங்கி கொள்ளுங்கள்
இறங்கியவர்கள்
ரீ குடித்தார்கள்
பனிஸ் சாப்பிட்டார்கள்
புகைப்பிடித்தார்கள்
மொத்தமாக எல்லோருமே
குறைந்தது
ஒன்றை வாங்கினார்கள்
ஆனால்
ஒவ்வொன்றினதும்
விலையோ இருமடங்காகவே
இருந்தது
நான் யோசித்தேன்
அந்த கடைக்காரர்களும் ....
பஸ்காரர்களும் ......
உறவுக்காரர்களோ என ....
நெடுந்தீவு முகிலன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக