வியாழன், 15 ஜூன், 2017

வடையின் விலையை கேட்டால் உழுந்து விலையை சொல்கிறார்கள் - பயணிகள் கவனத்திற்கு..A9னில் இரவு உணவகங்கள்
எதற்காக திறந்திருக்கின்றன.

பார்க்க பஸ் தரிப்பிடங்கள் போல்
காட்சியும் தருகின்றன.

ஓட்டுணரையும் நடத்துணரையும்
பின் அறைக்கு கூட்டிப்போய் பிரியாணி
கொடுக்கிறார்கள் .

பயணிகள் "பணீஸ் " வாங்கவும்
வரிசையில் நிற்கிறார்கள் .
'ஏதோ கட்சித் தொண்டர்கள் போல கை நீட்டிக்கொண்டு"

மீதி காசுக்கு "ரொபி" கொடுக்கிறார்கள்
பிளேன்ரிக்கும் "ரோக்கன்" கொடுக்கிறார்கள் .

வடையின் விலையை கேட்டால்
உழுந்து விலையை சொல்கிறார்கள்.

சாப்பாட்டை வாங்கி முதல்
வாய் வைக்கையில் சாப்பிட்டு முடித்துப் போன
ஓட்டுணர் "கோண் " அடிக்கிறார் .
"பயணிகள் பாதியில் ஓடுகிறார்கள்"

ஒரு வேளை விட்டுப் போகும் இந்த மீதி
உணவுகள் தான் அடுத்த பஸ்சில் வரும்
பயணிகள் சாப்பிடுகிறார்களோ...

சிலவேளை இதுதான்
பின் அறையின் பிரியாணியோ...

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக