திங்கள், 22 நவம்பர், 2010

பேஸ்புக் இணையத்தில் ஏலிஸபெத் மகாராணி

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, உலகபிரசித்தி பெற்ற பாடகி லேடி காசா, திபேத்தின் ஆன்மீகத் தலைவர் லாமா போன்ற பிரபலங்களைத் தொடர்ந்து பேஸ்புக் இணையதளத்தில் பிரவேசித்துள்ளார். பிரிட்டிஸ் மகா ராணி இரண்டாம் எலிஸபெத்.

இதுவரை அரச குடும்பம் என்ற ரீதியில் சாதாரண பிரiஐகளிடம் இருந்து ஒரளவு ஒதுங்கியே வாழ்ந்து வந்த மகா ராணியின் பேஸ்புக் பிரவேசம் பிரமாண்டமான வரவேற்பை பெற்றதுடன் இரண்டே நாட்க்களில் இரண்டு இலட்சத்திற்கம் அதிகமான உற்சாக வரவேற்பு அவருக்கு கிடைத்துள்ளது.

எனினும் மகாராணியின் இந்த பிரவேசம் ஒரு சாரார் மத்தியில் பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. பரம்பரை பமை;பரையாக பிரித்தாணிய அரச குடும்பம் கட்டிக்காத்துவந்த கௌரவத்தை மகாராணி நடு வீதிக்குக் கொண்டு வந்துள்ளார் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் அரச குடும்பம் என்ற கோதாவில் சாதாரண பிரiஐகளிடமிருந்து ஒதுங்கியே வாழ்ந்து வந்த நிலையை மாற்றி மகாராணி மக்களுக்கு மிகச் சமிபமாக வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கும் குறைவில்லை..

பிரிட்டிஸ் மகாராணியின் பேஸ்புக் பக்கத்தில் அரச குடும்பத்தினரின் பிரபல புகைப்பங்கள். நிகழ்வுகள், புத்தம் புதிய செய்திகள்,போன்றவை வெளியாகின்றன. அவ்வாறு வெளிவரும் தகவல்கள் பற்றிய மக்களின் அபிப்பிராயங்கள், கருத்துக்கணிப்புகள் போன்றவற்றை வாசகர்கள் தெரிவிக்கவும் அவரது பேஸ்புக்கில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனினும் மகாராணியின் பேஸ்புக் பக்கம் சாதாரணமான பக்கத்தை விட வித்தியாசமானது. சாதாரண பேஸ்புக் கணக்கில் நண்பர்களின் வேண்டுகோள்கள் (கசநைனௌ சநஙரநளவ) சேர்க்கப்படமாட்டாது எனினும் மகாராணியின் பக்கத்தில் பிரசுரிக்கப்படும் படங்கள்,செய்திகள்,பற்றிய விமர்சனங்களைப் பதிவதற்கும் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கும், வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பேஸ்புக் மூலம் அரச குடும்பம் இதுவரை கட்டிக்காத்து வந்த கௌரவம் ஊசாதீனப்படுத்தப்பட்டதாகவும் இப் பக்கத்தில் வெளியிடப்படும் தகவல்கள் அரச குடும்பத்தின் இரகசியங்களை அம்பலமாக்குகின்றன என்றும் கண்டனங்களும் எதிர்ப்புக்களும் நிறையவவே எழுந்துள்ளன.
அதே சமயம் மகாராணியும் மக்களில் ஒருவரே என்ற ரீதியில் அரச குடும்பத்தின் விவகாரங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வது அவரது பெருந்தக்மையை காட்டுகிறது என ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

அதே சமயம் இளவரசர் சார்ல்ஸ் அவரது காதலி கெமிலா பற்றி எழுதப்பட்ட மோசமான விமர்சனங்களும் மகாராணியின் பேஸ்புக் பக்கத்தில் நிரம்பிவழிகின்றன. அதனைத்தொடர்ந்து பேஸ்புக் பக்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்கவென அரச மாளிகையில் நியமிக்கப்பட்டிருந்த பணியாளர்கள் அத்தகைய தப்பவிப்பிராயங்களைக் களைவதற்காக விளக்கங்களை அளிப்பதற்கு முழு மூச்சில் செயற்பட வேண்டி வந்தது. எனினும் மகாராணி உட்ப்பட அரச குடும்பத்தினருக்கு ஏற்ப்பட்ட களங்கம் மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ முடியாத அளவுக்கு விஸ்வ ரூபம் எடுத்தள்ளது. அரச மாளிகைப் பணியாளர்கள் மகாராணியின் பேஸ்புக் பிரவேசம் விளைவித்துள்ள எதிரொலிகளால் கதிகலங்கிப்போயுள்ளனர்.


“பிரிட்டிஸ் மகாராணி இரண்டாம் எலிஸபெத் “பேஸ்புக்கில”; பிரவேசிவித்தது எங்களை பெருமையடையச் செய்கிறது. அவர் 16 நாடுகளுக்கு அரசி. அவ்வாறே பொதுநலவாய நாடுகளின் தலைவி. அவை எல்லாவற்றுக்கும் மேலாக இலட்சக்கணக்கான மக்களின் அன்புக்கு பாத்திரமானவர். அத்தகைய ஒருவர் அம் மக்களுக்கு சமிபமாக வர எத்தனிப்பதில் தவறில்லை. அதற்கு உதவுவதே அவரது “பேஸ்புக்” பிரவேசத்தின் நோக்கம் அரச குடும்பத்தைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அரசி நினைப்பதில் தப்பில்லை. அவ்வாறே அவரது அரச பணிகளுக்கும் இந்த பக்கம் உதவியாக இருக்கம் என அரச மாளிகையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1926 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21ஆம் திகதி பிறந்த அரசி எலிஸபெத்துக்கு தற்போது வயது 84. அரச குடும்ப பெண் என்பதால் மட்டும் அவர் சாதாரண பெண்களை விட வேறுபடவில்லை. தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அவர் மகாராணி எலிஸபெத் எனும் மேற்ப்படியில் இருந்து இறங்கி சாதாரண எலிஸபெத்தாக மக்களோடு மக்களாக இணைவதற்கு விரும்புகிறார். உலகில் நாள்தோறும் நடக்கும் மாற்றங்களை அறிந்து கொள்ள மகாராணி எப்போதும் முனைப்புடன் இருப்பார். அதற்கென வீடியோ படக்காட்சிகளை அடிக்கடி பர்ப்பது அவரது வழக்கம். அவரது “பேஸ்புக்” பிரவேசம் அத்தகைய ஒன்றே என வாதிடுபவர்களும் உள்ளனர்.

மகாராணியின் நவீன “எப்பள் ஐபொட்டில்” மேலத்தேயத்தின் ஏராளமான அதிவேகத்துள்ளாட்ட இசைகள் பதிவாகியுள்ளன. அவற்றை அடிக்கடி கேட்டு ரசிப்பது அவரது வழக்கமான பொழுதுபோக்கு. தற்போதய “பேஸ்புக்” பிரவேசத்தின் மூலம் அவர் தனது உண்மையான வயதை விட இளமையாக இருக்க விரும்புவதுடன் அரச பரம்பரை என்ற கோதாவை விடுத்து சாதாரண ஒரு பிரஐயாக மக்களுக்கு மிக சமீபமாக இருக்க விரும்புகிறார். எவ்வாறாயினும் பிரிட்டிஸ் அரச பரம்பரையின் தனிப்பட்ட விபரங்களை “பேஸ்புக்” மூலம் பகிர்ந்துகொள்ளும் எண்ணம் மகாராணிக்கு ஒரு போதும் கிடையாது. அரச குடும்பத்தின் அந்தரங்க்ளை பாதுகாத்துக்கொள்வதில் அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார். எனினும் நாளடைவில் இது சாத்தியப்படுமா…? என கேள்வி எழுப்புபவர்களும் உலகெங்கும் இருக்கவே செய்கிறார்கள்.

ஒரு காலத்தில் இளவரசி டயானா அரச குடும்பம் என்ற கோதாவை விடுத்து பொதுமக்களிடம் மிகவும் நெருங்கிப் பழகிய போது எலிஸபெத் மகாராணி தனது கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தார். அரச குடும்பத்தில் தனக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கண்டனங்களை இளவரசி டயானா பகீரங்கமாக தெரிவித்தார். “பேஸ்புக்” போன்ற இணையத்தளங்கள் இல்லாத காலத்திலேயே டயானா “பொதுமக்களின் இளவரசி” என பிரசித்தம் பெற்றிருந்தார். டயானாவுக்கு பொதுமக்கள் அளித்த ஆதரவு அரச பரம்பரையில் இது வரை எவருக்கும் கிடைக்கவில்லை. கிடைக்கபோவதும் இல்லை. என்பது உலகறிந்த விடையம்.

இப்போது “பேஸ்புக்” மூலம் இரண்டாவது எலிஸபெத் மக்களுக்கு மிக சமீபமாக வந்துள்ளார். அரச பரம்பரையினர் பொது மக்களை விட உயர்ஸ்தானத்தில் உள்ளவர்கள் என்ற கருத்தைக் களைந்து மகாராணியும் ஒரு சாதாரண பெண்னே என்ற உண்மையை உலகுக்கு தெளிவு படுத்தவே மகாராணி முயல்கிறார். என ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.

இளவரசி டயானாவின் அகால மரணத்திற்கு பிறகு அரச குடும்பத்தினர் மீது மக்கள் வைத்திருந்த அபிமானமும் நெருக்கமும் வெகு தூரம் பின்னடைந்து விட்டது. என்பது உண்மை. அதைத்தொடர்ந்து சால்ஸ்,கெமிலா திருமணம் அந்த நிலையை மேலும் பலவீனமாக்கியது. எவ்வாறாயினும் எலிஸபெத் மகாராணியின் “பேஸ்புக்” பக்கத்துக்கு குறுகிய காலத்தில் கிடைத்த மகத்தான வரவேற்பு ஆச்சரியப்படத்தக்கது. எனினும் அத்தகைய உற்சாக வரவேற்புகள் உண்டையில் மக்களின் அடி மனதில் இருந்து வந்தவையா..? அல்லது மகாராணியின் “பேஸ்புக்” வழியாக தங்களை பிரபலமாக்கிக் கொள்ள எடுக்கப்படும் முயற்சியா.. என்ற கேள்விக் குறியும் எழுந்துள்ளது.

பிரபலங்களின் பெயரில் ஏராளமான போலி பக்கங்கள் வெளிவருவது இன்று சாதாரனமாக நடக்கும் நிகழ்சி. எனினும் மகாராணியின் இந்த பக்கம் அவ்வாறு போலியானது அல்ல என்றும் நிருபணமாகிவிட்டது. அவ்வாறே இந்த பக்கத்துடன் சகலரும் கௌரவமான உறவை வழர்த்துக்கொள்வார்கள் என்ற உத்தரவாதத்தையும் எதிர்பார்க்க முடியாது. தேவையானால் ஒருவர் இந்த பக்கத்தை ஒரு கேலிப்பக்கமாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். இது வழக்கமான இணையத்தளத்தில் நாள் தோறும் நடக்கும் நிகழ்வு.

“ நான் நினைத்தேன் மகாராணியின் பேஸ்புக் மூலம் அவருடன் உரையாட (உhயவ) முடியுமென்று. ஆனால் அதற்கு அப் பக்கத்தில் இடமளிக்கவில்லை” என்கிறார். ஒரு இளைஞர்.

இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. பிரிட்டிஸ் அரச குடும்பத்தின் ளெகரவமும் மகாராணியின் செல்வாக்குமே என ஒரு சாரார் கருதுகின்றனர். துனி நபரொருபரின் தீர்மானம் அரச குடும்பத்துக்கு சரிப்பட்டுவராது. பல கோணங்களிலும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய விடயம். சுhதாரண மக்களுடன் நெருங்கிப் பழகவே நான் “பேஸ்புக்கில்” பிரவேசித்தேன். அரசியாக இருந்தாலும் நானும் ஒரு சாதாரண பெண்னே என எலிஸபெத் மகாராணி கருத்துக் கூறினாலும் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்த அரச குடும்பத்தின் கௌரவம் நடு வீதிக்கு வந்துள்ளது என்று கூறுபவர்களின் கருத்திலும் உண்மையுண்டு.

மகாராணியின் “பேஸ்புக்” பிரவேசம் அண்மையில் அவர் மக்களுடன் நெருங்குவதற்காக ஏற்ப்படுத்தப்பட்டதா. அல்லது ஏற்கனவே சரிந்து போன அரச குடும்பத்தின் கௌரவத்தை காப்பாற்றவா… என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


எவ்வாறாயினும் இந்த “பேஸ்புக்” பிரவேசத்தின் மூலம் உண்மையில் மக்களை நெருங்க எலிஸபெத் ஆர்வம் காட்டினால் அது வரவேற்க்கத்தக்கது.

“அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.” என்ற பழமொழிக்கேற்ப அரசியலில் ஈடுபட்டு சிறிதொரு பதவி கிடைத்த பின் தன்னை தேர்ந்தெடுத்த மக்களை மறந்து தொலைதூரம் சென்றுவிடும் இன்றைய அரசியல் வாதிகளுக்கு மத்தியில் “அரசியானாலும் நானும் ஒரு சாதனைப்பெண்னே” என தன்னடக்கத்துடன் நினைக்கும் எலிஸபெத் மகாராணியை பார்த்தாவது நம்மவர்கள் சற்றேனும் திருந்தினால் அது அரச குடும்பத்துக்கே அவர்கள் காட்டும் ஒரு கௌரவம் என நினைக்கத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக