செவ்வாய், 23 நவம்பர், 2010

ரத்தினபுரி மாவட்ட தமிழ்க்கொலை

“ இலக்கணமும் இலக்க்pயமும் தெரியாதவன்

ஏடெழுதல் கேடு நல்கும் “ (பாரதிதாசன் )

தமிழ் மொழிக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் பாரதி என்கிறார் டாக்டர் லீலாவதி அவர்கள் ஆனால் இந்த இலங்கைத்தீவில் தழிழர்களைப் போலவே தழிழுக்கும் ஆங்காங்கே தலை வெட்டப்படுவது வேதனைக்குரியது.

இலங்கையின் சப்ரமுவா மாகாண இரத்தினபுரி பகுதியில் பாரபட்சம் இன்றி அரச அரசசார்பற்ற சமூக அமைப்புக்களினதும் பொது நிறுவனங்களினதும் கண்மூடித்தனமான செயற்பாடுகளால் எழுத்துக்களும் வாக்கியங்களும் சரிவர எழதப்படாமல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பெயர் பலகைகளை அவதானிக்கையில் தழிழர்களுக்கான அங்கிகாரமும் கருத்துக்களுக்கான சுகந்திரமும் வெளியே தெரிய வருகின்றது

உடம்பில் ஏதாவது ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலே உடனே ஊனம் என்று முத்திரை குத்தப்படுகின்றது அது போலவேதான் ஒரு மொழியின் ஏதாவது ஒரு பகுதி பாதிக்கப்பட்டதும் ஊனம் என்று அழைத்துக்கொள்ளலாம் இரத்தினபுரி மாவட்ட பெயர் பலகைகளில் ஊனமாக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களை ஏன் தானோ இதுவரை யாரும் மாற்றுச்சிகிச்சை செய்துகொள்ளவில்லை அதற்கான காரணத்தை ஆராய முற்படுகையில் முறைமாறான தகவல்கள் அலைகளாக திரண்டெழுகின்றன

இலக்கணச்செம்மையை சரிவரக்கற்றவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் இல்லையா…?.அல்லது இரத்தினபுரி மாவட்ட அரச அரசசார்பற்ற அமைப்புகளில் தமிழர்களை இனைத்துக் கொள்வதில்லையா…?..

ஓத்த வடிவமுள்ள சொற்கள். ஒரு பொருள் தரும் பல சொற்கள். சொல்லின் தொனிப்பொருள். பலமான வினைச்செற்கள். பயனற்ற சொற்கள். சொற்த்;தொடர். சொற்தொடரின் தொனிப்பொருள்.

சொற்சேர்க்கை. சொற்களும் சொற்தொடர்களும் உரிய இடத்தில் இல்லாமை. வாக்கியப் பிழைகள். எழுவாய் பயனிலை பொருத்தமின்மை. பால் வழுக்கள். ஒருமை பன்மை தவறுகள். கால வழு. செய்வினை செயற்பாட்டுவினை பிரச்சனைகள். வேற்றுமை உருபு இடைச்சொல் குளறுபடிகள். இப்படி எண்ணில் அடங்காத எழுத்துப்பிழைகளோடும் கருத்துப்பிழைகளோடம் இரத்தினபுரி பிரதேசத்தின் அரச அரச சாற்பற்ற பொது நிறுவனங்களினதும் சமூக அமைப்புக்களினதும் பெயர் பலகைகள் காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றன

இதை சீர்செய்து மாற்றி அமைப்பதற்கு இலங்கை அரசியல் யாப்பிலா…?.மாற்றம் கொண்டு வரவேண்டும் வீணாய் எதற்காக காலதாமதமாக்கப்படுகிறதோ

“எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” எனப்படுகிறது திருக்குறளில்….

இறாலின் கொழுப்பு முழுவதும் அதன் தலையில் இருப்பதாக உயிரியல் நிபுணர்கள் உறுதி செய்திருக்கிறார்கள் அந்த இறாலை மனிதர்கள் வறுத்தும் பொரித்தும் உண்கிறார்கள் இதே மண்டக்கொழுப்பு மனிதர்களுக்கு இருக்குமாயின் அதை இன்னொரு மனிதன் விமர்சித்து விடுகிறான் இங்கே ஒரு சம்பவம் செய்தியாகின்றது இதே போலவேதான் இலங்கையும் - இரத்தின புரியும் - தமிழ் மொழியும் உதாரணம் (கொழும்பில் புதிதாக உருவாக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் பெயர் பலகையில் கொழும்பு என்பது தவறாக கொழுப்பு என பொறிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது)

“ஆரம்பமே அமர்களமாகி விட்டது” அதாவது இரத்தினபுரி வரவேற்கிறது என்பது சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளினாலும் அழகாக வர்ணம் தீட்டப்பட்டு இரத்தினபுரி நுழைவாயிலில் நாட்டப்பட்டிருக்கிறது ஆனால் தமிழ் எழுத்தில் மட்டுமே மிகப்பெரிய தவறு விடப்பட்டிருக்கிறது அதாவது இரத்தினபுரி வரவேற்கிறது என்பது இங்கே இரத்தினபுரி வரவேற்கிறதா என்று ஒரு கேள்விக்குறியோடு காட்சி தருகின்றது இது இரத்தினபுரியின் வரவேறப்;பிலே தமிழுக்கான முதற்கொலை

குறிப்பாக ஒரு நபரிடம் உங்களை வருக வருக என வரவேற்கிறோம் என்பதிலும் உங்களை வருக வருக என வரவேறப்;பதா..?.. என்பதிலும் ஒரு எழுத்து மாறுபடும் போது எவ்வாறான பதம். பொருள் மாறுபடுகிறது என்பது தெரியவருகின்றது

இருந்தாலும் நாம் ஒரு இடத்திற்கு பயணம் போகும் போது இடைய+கள் ஏற்ப்படும் பட்சத்தில் அவசகுணமென்று அந்தப் பயணத்தை நிறுத்திவிடுகின்றோம் சிpலவேளை இடையூறுகள் வரும் என்று தெரிந்தும் தேவைக்காக பயணத்தை மேற்க்கொள்கிறோம் ஆனால் இது உண்மையாகவே எனது இரத்தினபுரி பயணத்தில் நான் அனுபவித்த ஒன்று…. உள்ளே முக்கிய அடுத்த இடமாக சப்ரகமுவ மாகாண சபைக்கு சென்றிருந்தோம் ஆச்சரியமான ஒன்று நுழைவாயிலே தூக்கி வாரிப்போட்டது

சப்ரகமுவ மாகாண கட்டிடத் தொகுதி என்பது சபரமுவா மாகாண கட்டிடந் தொகுதி என்று காட்சி தந்தது இங்கே ஊரின் பெயரும் தவறாகவம் அதன் பகுதிப் பெயரும் தவறாகவும் காணப்பட்டதோடு சிங்கள எமுத்துக்களிலோ அல்லது ஆங்கில எமுத்துகளிலோ எந்தத் தவறுகளும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இரத்தினபுரி மாகாண பதில் செயலாளர் சுயித்திரா குணவர்தனவுடன் கேட்டபோது இந்த பெயர்ப்பலகை பாவனைக்கு உடப்;படுத்தப்பட்டு இதுவரை நான்கு வருடங்கள் கடந்து விட்டன ஆனால் இதில் தமிழ் எழுத்துப்பிழைகள் இருப்பதாக இப்போதுதான் தெரியவருகிறது இருந்தாலும் இந்த எழுத்து பிழைகள் விடுபட்டமைக்கான காரணம் என்னவெனில் இங்கே வாழும் தமிழ் மக்கள் கூட சிங்களமொழிக்கு பழக்கப்பட்டு விட்டார்கள் அத்தோடு தமிழ் மொழியினை இங்கே வாழும் தமிழ் மக்கள் இரண்டாம் மொழியாகவே

கருதுகிறார்கள்

காலமும் சூழலும் ஒரு மனிதனை எவ்வாறு மாற்றிவிடுகிறது தெரிகிறதா…?.. அங்கே தமிழ் எழுத்துக்களில் விடுபட்ட தவறுகளுக்கான காரணத்தை அவதானிக்கையில் அந்த தவறுகளை தமிழர்கள்தான் விட்டார்கள் என்று கதை சொல்லப்படுகின்றது ஒரு வகையில் அது ஏற்றுக்கொள்ளக்கூடியாதாகவும் உள்ளது ஏனெனில் இந்த தவறு விடப்பட்டு நான்கு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன ஆனால் அந்த தவறுபற்றிய விமர்சனமோ அல்லது திருத்தப்படவேண்டும் என்ற கருத்துக்களையோ யாரும் இதுவரை முன்வைக்கப்படவில்லை இந்தப்பிழைகள் தொடர்ந்து நிலைத்து வாழ்வதற்கு நாமும் சில இடங்களில் துணைபோயிருக்கிறோம் என்பதை காலத்தின் தேவை கருதி ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இரத்திபுரி வரவேற்கிறது என்பதிலே ஆரம்பித்த எழுத்துப்பிழைக் குளறுபடிகள் உள்ளே செல்லச்செல்ல இன்னும் அதிகரித்துக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும்; அவசரநடவடிக்கைகளகள் பிரிவும் ஒரே இடத்தில் இரத்தினபுரியில் இயங்கிவருகிறது என்றாலும் இந்த இரண்டின் பெயர் பலகைகளிலும் படு மோசமான எழுத்துப்பிழைகள் விடப்பட்டிருக்கின்றன மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திலையம எனவும் அவசர நடவடிக்கைகள் பிரிவு என்பது அவசர நடவடிககைக்ள பிரிவு எனவும் காட்சிப்படுத்தபட்டுள்ளது இங்கு விடப்பட்;ட தவறுகளுக்கான காரணம் எதுவாக இருப்பினும்….

இது பற்றி அனர்த்த முகாமைத்துவ இரத்தினபுரி மாவட்ட அதிகாரி கேணல் அபேயவர்த்தனவிடம் கேட்டபோது சரியாக தமிழ் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் இரத்தினபுரியில் இல்லை என்றும் இருக்கும் ஒருசிலரும் இது பற்றி சிந்திப்பதி;ல்லை என்றும் இப்போதுதான் தங்கள் ஊழியர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்ததோடு பெயர்ப்பலகையில் விடப்பட்டிருக்கும் எழுத்து தவறு இப்போதுதான் தங்களுக்கு தெரியவந்திருக்கிறது என்றும் தெரிவித்தார் இருந்தாலும் இந்த தவறினை வெகுவிரைவில் சீர் செய்வதாகவும் கருத்து வெளியிட்டார்

தவறுகளை இனங்கண்டு ஆராய்ந்து பார்க்கிற போதுதான் தெரியவருகிறது தவறுகள் அதிகம் தவறுகள் என்று தெரியாமலே +தலைதூக்கி நின்றிருக்கின்றன ஆனால் இங்கே எழுத்துக்கள்தான் இதுவரை தவறுகளாய் விடப்பட்டிருந்தாலும் மிக முக்கியமான அரச நிறுவனத்தில் ஒரு வாக்கியமே பிழையாக்கப்பட்டிருக்கிறது

இரத்தினபுரி மாவட்ட பிரதேசசெயலகத்தில் சிங்களத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்பலகையில் சிங்கள மொழியினை அப்படியே மொழிபெயர்த்து தமிழுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது அதிலும் தவறு விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பாக இரத்தினபுரி உதவி மாவட்ட அரசாங்க அதிபர்…ஏ..எச் எஸ் திசாநாயக்க அவர்களிடம் கேட்ட போது இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிகாரிகள் தெரிவித்ததை விட இவர் வித்தியாசமான கருத்தொண்றை தெரிவித்தார்

அதாவது இது தவறு என்று தங்களுக்கு தெரிந்த போதும் இதை மாற்றி அமைப்பதற்க்கு அதற்க்கான நிதி பிரச்சனையினை காரனம் காட்டி பேசினார்

இதல் இருந்து நாம் எதனை விளங்கிக்கொள்கின்றோம் இந்த பதிலினை அவதானிக்கையில் சிங்கள ஆங்கில மொழியில் ஒரு தவறு விடப்பட்டிருக்கும் ஆயின் நிதிப்பிரச்சனைகளை காரணம் காட்டி கதைத்துக்கொண்டிருப்பார்களா…?..

இப்படி இரத்தினபுரி மாவட்டத்தில் அரசாங்க அரசசார்பற்ற சமூக நிறுவனங்கள் என்று ஒன்றும் விடாமல் எல்லாவற்றிலுமே தவறுகள் தமிழ் எழுத்துக்களில் மட்டும் விடப்பட்டிருப்பது கேலிக்குரியதாகவே காணப்படுகின்றது

முக்கியமாக இரத்தினபுரி சென் யோக்கிங் தமிழ் வித்தியாலய பெயர் பலகை சிங்கள மொழியிலே எழுதப்பட்டிருக்கிறது ஆனால் அங்கே தமிழ் எழுத்துக்களாகக் காணப்படுவது சிங்கள மொழியினை அப்படியே தமிழுக்கு மாற்றப்பட்டிருக்கிறது

சமுர்த்தி சங்கங்கள் தங்குமிடவிடுதிகள் ஆலயங்கள் பாடசாலைகள் என்று எந்த பாகுபாடுகளுமின்றி எல்லா இடங்களிலுமே தமி;ழ் மொழி கொலைசெய்யப்பட்டிருக்கிறது

பொதுவாக இது தொடர்பாக இரத்தினபுரி மாவட்டத்து அரசாங்க அதிபர் எச்.டபிள்யு.குணதாசிடம் கேட்ட போது ஆரம்பகாலம் தொட்டு இரத்தினபுரியில் தமிழுக்கு இந்த பிழை இருந்து வருவதாகவும் இதுவரை இதற்கான எந்த அறித்தல்களோ தகவல்களோ தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும் இன்றில் இருந்து இவற்ரை சீர் செய்வதற்கு தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்

இருந்தாலும் தமிழர்கள் பல வருடக்கணக்காக சிறுபாண்மை இனமாக புறந்தள்ளப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த உண்மை அது போல் இல்லாமல் வெகுவிரைவில் சீர் செய்யப்பட்டால் அது தமிழர்களுக்கும் இலங்கை ஐனநாயக சோசலிச குடியரசு என்ற பெயருக்கும் பெருமை சேர்த்து நிற்க்கும்.

வி.முகிலன்
இலங்கை ஊடகவியலாளர் கல்லூரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக