செவ்வாய், 30 நவம்பர், 2010

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா….

தொண்ணுற்றி ஐந்து பேர் கொண்ட அமைச்சரவையில் முஸ்லீம் கொங்கிரஸைச் சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர். ஒருவர் தலைவர் ரவூப் ஸ+க்கீம்.அடுத்தவர் தவிசாளர் சேகுகாவூத் பஸீர்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு – அவருடைய விருப்பங்களுக்குமான அரசியலுக்கு ஆதரவளிக்கும் பேரில் - நாடாளுமண்ற உறுப்பினர்களில் ஐ.தே.க இருந்து பிரிந்து சென்ற ஸ்ரீரங்காவும், ஐனநாயக மக்கள் முன்னனியின் தலைவர்களில் ஒருவரான பிரபா கனேசனும் அடங்குவர்.

இதைத்தவிர - இலங்கையின் ஐனநாயகத்துக்கு உயிரூட்டப்போகிறோம் என்று, குடும்ப ஆதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்க்கப் போகிறோம் என்று முழங்கிய தேர்தல் கால புரட்சியாளர்களில் கணிசமானவர்கள் இப்போது மகிந்த ராஜபக்ஸ+வின் அரசாங்கத்தில் அமைச்சர்களும் அங்த்தவர்களாவும் ஆகிவிட்டனர்.

இவ்வளவிற்கும் மகிந்த ராஜ பக்சவின் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் இருந்ததைப்போல , அதன் தொடர்சியைப் பின்பற்றியவாறே இருக்கிறது. அல்லது அது இன்னும் தன்னை வலுவாக – தனது தளத்தில் ஸ்தாபிக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.



இப்போது நாமலைத் தெரியாதவர்கள் யாருமே இல்லை ஒரு மூத்த அரசியல் வாதியையும் விட அதிகம் அறிமுகமானவராகவும் செல்வாக்க உடயவராகவும் நாமல் இருக்கிறார். நாமலுடன் தோழமை கொள்வதற்க்காக மூத்த அரசியல் வாதிகள் பலரும் போட்டி போடுகிறார்கள்.

ஆகையால் ராஜ பக்ச குடும்பத்தின் ஆட்சி அதிகாரம் மேலும் பலமாகியுள்ளது. அவருடைய அரசாங்கத்தின் ஏனைய நடைமுறைகளிலும் வேறுபாடுகள் இல்லை. இந்த நிலையிலேயே எதிர்தரப்புகளிடமிருந்த பலரும் இப்போது அரசாங்கத்துக்கும் ஜனநாயகத்துக்கும் ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

இதுதான் வியப்பூட்டுவது. இதில் முக்கியமான ஒருவர் ரவூப் ஸ+க்கீம். ஒரு அணி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலிலும் சரி, நாடாளுமண்ற தேர்தலிலும் சரி முஸ்லீம் காங்கிரஸ் கொண்டிருந்த நிலைப்பாடும் விடுத்திருந்த அறிவுப்புகளும் மகிந்த அரசாங்கத்தை முற்றாக நிராகரிப்பதாகவே இருந்தன.

அவ்வாறே பிரபா கனேசன், ஸ்ரீரங்கா, மற்றும் மலையகக் கட்சிகளின் நிலைப்பாடுகளும் அறிவிப்பகளும் இருந்தன. இதில் மிச்ச உச்சமாக ஸ்ரீரங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளராக இருக்கம் கவிஞர் சேகுதாவூத் பஸீரின் கருத்துகள் இருந்ததை இங்கே குறிப்பிட வேண்டும். ஏழு அறிவு ஜீவியாகவும் ஜனநாயக விழுமியங்களுக்காகப் போராடும் பாஸீர் பல பேட்டிகளில் கருத்துத் தெரிவித்தார்.

அப்போது இவர்கள் முன்நிறுத்திய ஒரு கேடயம் ஜெனரல் சரத்பொன்சேகா. வலுவிற்றிருந்தோருக்கெல்லாம் ஒரு ஆயுதமாக சரத் பொன்சேகா பயன்படுத்தப்பட்டார். சரத் பொன்சேகா ஆயுதங்களை பயன்படுத்துவதில் ஒரு திறமையள்ள ஒரு தளபதியாக இருக்கலாம். போரில் வெற்றியையும் சாதகங்களை நிகழ்தும் ஒரு வீரனாகவும் இருக்கலாம்.

ஆனால் அரசியலில் அவரை மற்றவர்களே ஆயுதமாக்கினார்கள். அரசியலில் அவர் வெற்றி பெறுவதற்கு கடினமான ஒருவராகவே இருக்கிறார்.

எப்படியோ ஜனாதிபதி தேர்தலின் போது, ஸ+க்கீம்,ரணில்,சோமவன்ஸ,போன்ற அத்தனை பேருக்கம் சரத் என்ற ஆயுதம் அவசியமாக்கப்பட்டது.

இப்போது சரத்பொன்சேகாவுக்கு ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் ஸ+க்கீம், பஸீர், ரங்கா, பிரபாகனேசன், உள்ளிட்ட ஐ.தே.க காரர்கள் சிலர் என அரசாங்கத்தின் பக்கம் சென்றுவிட்டனர்.

இதில் ஸ+க்கீம் நீதி அமைச்சராகப் பதவியும் ஏற்றுவிட்டார். தேர்தல் காலத்தில் தான் வெளிவிட்ட அத்தனை வார்த்தைகளையும் இரவோடிரவாக விழுங்கிக்கொண்டு, மறுநாள் பதவியேற்ப்பில் சத்தியபரமாணத்தையும் செய்து கொண்டார்.

இதில் அவருக்கோ அல்லது அவரை போன்றோர்களுக்கோ எந்த வெட்க்கமும் இருப்பதாக படவில்லை. எந்த மனச்சாட்சியும் இருப்பதாக தெரியவில்லை. “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா - இதுக்கு போய் அலட்டிக்கொள்ளலாமா” என்று பஞக் டயலக் சொல்வதற்கு மக்கள் என்ன நகைச்சுவை விடும் நிலையிலா இருக்கிறார்கள்.

அரசியல் விதியின் படி வாய்ப்பகளை பயன்படுத்துவதற்க்கான உபாயங்களை கையாள்வது என்பது வேறு, வசதிகளை பெறுவதற்க்காக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது வேறு.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள இந்த புதிய விருந்தாளிகள் வசதிகளை நோக்கமாகவே கொண்டிருக்கின்றனர்.

இல்லையெனில், அரசாங்கத்திடம் ஏற்ப்பட்டிருக்கும் மாற்றத்தையோ, மறுமலர்சியையோ, கண்டு விட்டா இவ்வாறு தமது ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.

அல்லது அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதன் மூலம் நினைப்பதெல்லாத்தையும் சாதித்து விடலாம்என்றோ…? தூம் சார்ந்த சமூகங்களின் தேவைகளை எல்லாம் பெற்றுவிடலாம் என்றோ..? கருதியா அளிக்க முன்வந்தார்கள்.

உண்மையில் மகிந்த அரசின் முன்னால் தாம் இப்போதைக்கு எதுவுமே செய்யமுடியாது என்ற கைமாறு நிலைதான்.இந்த நிலைப்பாட்டு மாற்றத்தக்கு க் காரணம். இதைத்தான் “சரணாகதி” என்று சொல்வது.

ஏறக்குறைய கூட்டமைப்பும் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் ஒரு அணக்கப்பாட்டுக்க செல்வதைத்தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற நிலையை இந்தியாவும் இலங்கையும் உருவாக்கிக்கொள்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இந்திய வெளிவிவார அமைச்சர் சொன்ன கூற்று இதையே மெய்மறந்துள்ளது. நடைபெற்ற போரானது நல்லினக்கத்துக்கானதே என்று . ஆனால் இதன் பின்னரான நிலைகள் குறித்து இந்தியா விளக்கமளிக்கவில்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக