எனது நிலா சூரியன் உடுக்கள் கோள்கள் மின்னலை கூட
எனது வானத்தில் இருந்து - யாரோ களவாடி விட்டார்கள்.
எனது வானத்தில் இருந்து - யாரோ களவாடி விட்டார்கள்.
இருட்டுக்கு பழகிய என் வாழ்தலில்
கறுப்பு இரட்டிப்பாகிவிட்டது.
கறுப்பு இரட்டிப்பாகிவிட்டது.
இருந்த வெளிச்சமும் அணைந்து
புகையே மேல் எழ இருண்ட தெருவில்
பயணம் போகின்றேன்.
புகையே மேல் எழ இருண்ட தெருவில்
பயணம் போகின்றேன்.
வண்டல் வண்டலாய்என் வண்ணக் கனவுகள் இரண்டே விழிக்குள் பதுங்கியிருந்தன - இப்போது இறந்து கிடக்கின்றன.
எங்கோவாவது மின்மினி பூச்சியை பார்த்தால்
பின்னால் ஓடும் பழக்கமும் எனக்கு இல்லை...
பின்னால் ஓடும் பழக்கமும் எனக்கு இல்லை...
விண்வெளியில் பெரும் கறுப்பு ஓட்டைகள் நட்சத்திரங்களை விழுங்குகின்றனவாம். கறுப்பு இங்கே என்னை துப்பி விட்டிருக்கின்றது.
கறுப்பு என்பது ஒரு நிறம் அல்ல - அது எந்த நிறங்களின் இல்லாமையே...
அதனாலே எனது வாழ்க்கையும் ஒத்துப்போகிறது போல...
அதனாலே எனது வாழ்க்கையும் ஒத்துப்போகிறது போல...
கறுப்பு எனது வானம் மட்டும் அல்ல - என் தேசமும்
கூடவே விடுதலையும் தான்.
கூடவே விடுதலையும் தான்.
நெடுந்தீவு முகிலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக