எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.
எனது அப்போதய தோற்றத்திற்கும் - இப்போதய
மாற்றத்திற்கும் பெரிதாக வேறுபாடுகள் இல்லை...எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.
மாற்றத்திற்கும் பெரிதாக வேறுபாடுகள் இல்லை...எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.
கடவு சீட்டையோ - வங்கி கடனையோ எனது
அடையாள அட்டையினை வைத்துக் கொண்டு
உன்னால் எனக்கு பெற்றுத்தரவாவது முடியுமா...எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.
அடையாள அட்டையினை வைத்துக் கொண்டு
உன்னால் எனக்கு பெற்றுத்தரவாவது முடியுமா...எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.
தற்காலிக கொட்டகையின் தாள்வாரத்தில் படுத்திருக்கும் எனது வழர்ப்பு நாய் - உன்னை பார்த்து குரைக்காமல் வாலாட்டுகிறது - நீயோ எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.
எனது பிறந்த ஆண்டு மாதம் திகதியில் பொருத்தம் ஏதாவது பார்த்து - உன் கொடூர சகோதரன் யாரையாவது என்னோடு கோத்து விட போகிறாயா... எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.
எங்கள் அடையாளங்கள் எல்லாமுமே தொலைந்ததென்றான பிறகும் - எதற்காகவோ எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.
உன்னை தூரத்தில் பார்த்ததும் நீயாக கேட்கும் முன்னரே பழக்கதோசத்தில் - அடையாள அட்டையினை நானகவே எடுத்து நீட்டுகிறேன்.
நெடுந்தீவு – முகிலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக