கடந்து வந்த பாதையில் முள்ளு குத்திய ரத்தமே காயவில்லை - தழும்பு எப்படி ஆறும்.
இதுவரை கால்களின் போக்கிலே போனது போதும் என்றுதான் நினைக்கிறேன் - ஏனோ நடந்து பழகிவிட்ட பாதங்கள் நகரவே துடிக்கின்றன.
நிழலாவது துணைக்கு வரும் என்ற நம்பிக்கையிலேயே நடந்தேனன் - பாதையில் இருள் சூழ்ந்ததால் என் விம்பமே என்னை விட்டு ஓடி விட்டது.
தனிமை எனக்கு எந்த தண்டனையையும் தரவில்லை என்றாலும் - வலி என்னை கொஞ்சம் அநாவசியமாக அழவைத்தது உண்மைதான்..
எனக்கென்று நிரந்தரமாக இருந்த நின்மதியே பறிபோனது பறவாயில்லை.. அது அற்ப ஆசைக்கு விலைபோனது கவலைதான்.
பசிக்கும் போதெல்லாம் நினைவுகளை சாப்பிடுவதாகவும் கண்ணீரை பருகுவதாகவுமே நினைந்தேன். - ஆனால் சாப்பிட்டு முடிந்ததும் வெளியெ வீசும் எச்சில் இலையாக இதயத்தை ஒரு போதும் நினைக்கவில்லை..
பருந்தின் கால்களினிடையே நசுங்கி இரையான... கோழி குஞ்சாய் பரிதவித்து கென்டிருக்கிறேன் - ஆனாலும் வல்லூறுகள் என்னை வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன.
நெடுந்தீவு முகிலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக