வியாழன், 18 ஆகஸ்ட், 2016

நான் குழந்தையாய் இருக்கையில் - எனக்கு
பிச்சை கொடுக்க ஒருவரேனும் முன்வரவில்லை….

நான் குமரியான பின்பு - என் வெள்ளைத்தோலுக்கு எல்லோருமே விண்ணப்பித்திருந்தீர்கள்.

என் சதையில் இருக்கும் பற்று – உங்களில்
ஒருவருக்காவது என் மனிதாபிமானத்தில்…
இல்லாமல் போனது ஏன்….?

பகலில் இராமர் வேசம் போட்டாலும்… இரவில்
கரிசனையோடு என் வீட்டுக்கதவு தட்டி என் இளமையிலும் - இனிமை தடவிப்போனீர்கள்.

உங்களுக்கு உணர்வு சுரந்த போதல்லாம் ... என்னிலே மூழ்கிப் போனீர்கள் நானும் தாராளமாய் சம்பாதித்தேன் ஒரு சிலர்… கடனும் வைத்தீர்கள்.

இப்போது என் இளமை கலைந்த பின்பு ஏன்…? நீங்கள் - என்னிடம் வந்து போவதில்லை…

நான் திரும்பவும் குழந்தை மாதிரி பிச்சை எடுக்க.. ஆரம்பித்துவிட்டேன்.

நெடுந்தீவு – முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக