கரப்புக்குள் கோழியும் குஞ்சும் குறுணால் அரிசியையே பங்கிட்டு தின்கிறது.
என் வளவுக் கடப்பை திறந்து எனைக் கான வரமாட்டாயா...
என் வளவுக் கடப்பை திறந்து எனைக் கான வரமாட்டாயா...
உமிக் கரியில் பல் விளக்கி தென்ணோலை கிழித்து நாக்கு வளித்து
முடியை மிளித்திளுத்து சேலைத்தலைப்பால் முடிந்துகட்டி காத்துக்கிடக்கிறேன்.
முடியை மிளித்திளுத்து சேலைத்தலைப்பால் முடிந்துகட்டி காத்துக்கிடக்கிறேன்.
பூக்கம் பாளையால் முற்றம் பெருக்கி மஞ்சல் கரைத்து தெழித்து - கறி கழுவும் இடத்தில் நட்டு வழர்த்த கறிவேப்பிலை மரமாய் வாசனையோடு பூத்திருக்கிறேன்.
சாணி மொழுகிய திண்னையில் திருவலையில் உன்னை இருத்தி
வாழையிலையில் கை குத்தரிசி சோறு போட ஏங்கி நிற்கிறேன்.
வாழையிலையில் கை குத்தரிசி சோறு போட ஏங்கி நிற்கிறேன்.
செத்தைக்குள் சொருகிக் கிடக்கும் கடுதாசிகளிலே என் ஆசைகளை கிறுக்கி விட்டு - சுடு தேத்தண்ணியில் விழுந்த கட்டெறும்பாய் துடித்துக்கொண்டிருக்கிறேன்.
கோர்காலியில் விரித்த சாய் ஓலை பாயோடும் தலைக்கு வைக்கும் உடுப்பு பொட்டாளியோடும் நூந்து போன போத்தில் விளக்கோடும் என் இரவுகளை கடக்கின்றேன்.
சாமத்தில் படலையில் மாடு முட்டினாலும் நீ தான் என்று - என் கண் விழித்த பின்புதான் நாயே குரைக்கும்.
நெடுந்தீவு முகிலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக