எந்த கடவுளிடம் என்ன வரம் கேட்பது.
யாரிடம் என்ன கேட்பது என்று தெரியால் கேட்கிறேன்.
கேட்கும் வரம் நிறைவேறாத போது எல்லா கடவுள்களையும் உள்ளுக்குள் திட்டுகிறேன்.
கேட்காத ஏதும் நிறைவேறும் போது எல்லா கடவுள்களையும் வெளிப்படையாக வணங்குகிறேன்.
"நான் தான் வரம் தந்தேன்" என்று நேரில் வந்து பேசவோ...
மறைமுகமாக கருத்து தெரிவிக்கவோ... எந்த கடவுளாலும் இயலவில்லை....
மறைமுகமாக கருத்து தெரிவிக்கவோ... எந்த கடவுளாலும் இயலவில்லை....
எந்த கடவுள் எனக்கு வரம் தந்தார் என்று... எனக்கு தெரியாத வரைக்கும்
எல்லா கடவுள்களையும் என்னால் நம்ப வேண்டியிருக்கிறது.
எல்லா கடவுள்களையும் என்னால் நம்ப வேண்டியிருக்கிறது.
நெடுந்தீவு முகிலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக