துக்கமான சம்பவங்களோடும் துயரமான நிகழ்வுகளோடும் என் இருப்பும் தக்கவைத்துக்கொள்ளப்பட்டது.

காலங்களும் அது தந்த காயங்களும்
ஞாபகத்தில் வருவதால் மனதிலே
வலியும் நோவும் குறைய வாய்ப்பில்லை...
ஞாபகத்தில் வருவதால் மனதிலே
வலியும் நோவும் குறைய வாய்ப்பில்லை...
வாழ்க்கையில் மறக்க முடியாதவர் என்று
எல்லோருக்கும் குறைந்த பட்சம் ஒருவராவது
நினைவிலிருப்பார்.
எல்லோருக்கும் குறைந்த பட்சம் ஒருவராவது
நினைவிலிருப்பார்.
எனக்கும் ஒருவர் நிரந்தரமானவராக இருந்தார்
அவரின் பெயரையோ முகவரியையோ முகநூலினையோ இங்கே அடையாளப்படுத்த நான் விரும்பவில்லை...
அவரின் தொடர்பை வலுப்படுத்திய நாளிலிருந்து பலரது தொடர்பிலிருந்து நான் விடுபட்டேன்.
இதுவரை கிடைக்கவில்லை என்று ஏங்கியிருந்த அரவனைப்பும்
அலாதியான பிரியமும் அவரிடமிருந்து நிறையவே கிடைத்தது.
அலாதியான பிரியமும் அவரிடமிருந்து நிறையவே கிடைத்தது.
எனது ஏக்கங்களையும் வகைப்படுத்தி வைத்திருந்த அந்தரங்க ஆசைகளையும் அவரிடமே மறைக்காமல் மனம் விட்டு பேசவும் முடிந்தது.
தொட்டு பேசுவதற்கான உரிமை வழங்கப்பட்டிருந்த போதும் வெட்கப்பட்டு தலைகுனிவதில் ரசனை இருந்தது.
தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் அவரது பார்வைகளிலும் வார்த்தைகளிலுமிருந்து கற்றும்கொண்டேன்.
கூட இருந்த உறவுகளை ஒதுக்கி அவர் மட்டுமே என் எதிர்கால சொந்தம் என நானும் பலர் முன் காண்ப்பித்தேன்.
வாடகை வாங்காமல் என் இதயத்தில் குடியிருக்க அவருக்கு மட்டுமே இடமும் கொடுத்திருந்தேன்
கொஞ்ச நாளாய் அவர் புது வீடு மாறிவிட்டதாக கேள்விப்பட்டேன் - நம்பமுடியவில்லை...
நெடுந்தீவு முகிலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக