வெளியே தெரியாது.
பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது.
சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும்
உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன்.
உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன்.
என் அழுகைக்கான காரணத்தை
அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை...
அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை...
இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான்
எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ
எனக்கே தெரியாது.
எனக்கே தெரியாது.
அழுகையின் தொடக்கமும் முடிவும்
அழுகையாகவே மட்டும் இருக்கிறது.
அழுகையாகவே மட்டும் இருக்கிறது.
கிடைக்கும் தனிமைகளை எல்லாம்
அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன்.
அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன்.
அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின்
மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன்.
மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன்.
அழாத நாட்கள் என்று ஒன்றமே
என்னை கடந்ததாக இல்லை...
என்னை கடந்ததாக இல்லை...
அழுகையை விட ஒரு நண்பன்
இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை...
இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை...
அழுவதற்கென்று குளியல் அறையினையே
நான் அதிகம் பயன்படுத்துகின்றேன்.
யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும்
எனக்கு பயமில்லை...
நான் அதிகம் பயன்படுத்துகின்றேன்.
யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும்
எனக்கு பயமில்லை...
எனது அழுகையினை எனது குளியல்
ஒருபோதும் காட்டியே கொடுத்ததில்லை.
துரோகிகளைப் போல...
ஒருபோதும் காட்டியே கொடுத்ததில்லை.
துரோகிகளைப் போல...
நெடுந்தீவு முகிலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக