வியாழன், 18 ஆகஸ்ட், 2016

சமீப காலமாக நான் சாகடிக்கப்பட்டு கொண்டிருக்கிறேன் சாத்தானுக்கு விரைவில் விருந்தாகவும் போக போகிறேன்

ஊசி குத்தினாலே ஊரை கூப்பிடும் நான் - தற்போது  கழுத்தை அறுத்தாலும் கத்தினால் யாருக்கும் 
கேட்க்காத தூரம் போய் விட்டேன்.

வாளால் என்னை வெட்டுவார்கள் என நானும் எதிர்பார்த்திருக்கிறேன் - வார்த்தைகளை தவிர
கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தமாட்டார்கள்.

இங்கே ரத்தம் வடியாது காயமும் வெளியே தெரியாது
மற்றவர்கள் முன் என்னால் அழவும் முடியாது - இதனால்
தண்டிப்பவர்கள் நன்றாக தப்பித்தும் விடுகிறார்கள்.

வேடிக்கை பார்ப்பவர்கள் என்னில் இரக்கப்பட்டாலும்
நான் தாக்கப்படுவது குறைவதில்லை - தண்டனை
வழங்க தகுதியற்றவர்களால் தாக்கப்படுவதையே
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

அவர்களை ஒரே கீறலில் என்னால்
கூறு போட முடியும் - ஆனால்
வாயை மூடிக்கொண்டு இந்த கிறுக்கலோடு முடிக்கின்றேன்.

மௌனத்தையே நானும் ஆயுதமாக பயன்படுத்துகிறேன்
அது ஒரு போதும் யாருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது - என்
இலக்குக்கு இலகுவான வழி இது என்றே நம்புகிறேன்.

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக