வியாழன், 18 ஆகஸ்ட், 2016

குழந்தை குமரி ஆனதும் தங்களிடம் 
ஒரு தேவதை இருக்கிறாள் என்று... ஊருக்கெல்லாம் 
அழைப்பு வைத்து ஆடம்பரமாய் சடங்குகள் முடிகிறது.

முடி சிக்கு எடுக்காமலே ஓரங்களில் இரட்டை
பின்னலோடு திரிந்த இந்த சின்ன குருவி
வயதுக்கு வந்ததும் கூந்தலை அயன் பண்ணுகிறது.

பவுடர் பூசாமலே பள்ளிக்கூடம் 
போனது நினைவில் இல்லை - இப்போது 
பால்க்காரன் வெல் அடித்தாலும் பேஸ் வோஸ் 
பண்ணிட்டுத்தான் கதவு திறக்க வருகிறது..

அம்மா மேல் கால் போட்டு படுத்த பிள்ளை
தனி அறையில் ஐ போனோடு சிரிக்கிறது.

உடம்பில் உடுப்பில் உணர்வில் உணவில் என்று
ஒட்டுமொத்தமாய் எல்லாம் மாற்றமடைகிறது.
எதைக்கேட்டாலும் வெட்கம் தருகிறது.

மழை வந்தால் முற்றத்தில் கூட்டமாய் 
காகிதத்தில் கம்பல் விட்ட கதை மறந்து - இப்போது
மொட்டைமாடிக்கு போய் தனியாய்
லேசாக நனைந்து பாட்டு பாடும் ஆசை வருகிறது.

தன்னை தானே ரசிக்கும் அழகிய பருவம்
இது - ஆனால் இந்த கனவை கொஞ்ச நாளிலே
கலைத்து குடும்பம்  ஒரு கலியாணம் கட்டி கொடுத்து
பெரிய மனிசி ஆக்கிடுது.

''தாவணிகளை அவசர புடவைகளாக்காதீர்கள்
விரைவில் விதவைகளாகி விடுவார்கள் சிலவேளை விரைவிலே விவாகாரத்தும் கேட்டு விடுவார்கள்.''

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக